வியட்நாமை புரட்டி போட்ட சூறாவளி: 87 பேர் பலி
China
Vietnam
World
By Raghav
வியட்நாமின் (Vietnam) வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங் ஆகிய பகுதிகளில் வீசிய கடும் புயல் காரணமாக 87 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யாகி என பெயரிடப்பட்ட இந்த புயல் கடந்த ஞாயிற்றுகிழமை (08) வியட்நாமை தாக்கியது.
இயல்பு வாழ்க்கை
புயல் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், தொடர்ந்து மழை பெய்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் பாதிப்புகளில் சிக்கி இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளதுடன், 70 பேர் காணாமல் போயுள்ள நிலையில். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாகி புயல் வியட்நாமை தாக்குவதற்கு முன்பு, தெற்கு சீனா (China) மற்றும் பிலிப்பைன்சை (Philippines) தாக்கியதில் 24 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்