ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் விபத்தில் பலி
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
UNP
By Dilakshan
ஐக்கிய தேசியக் கட்சியின் வென்னப்புவ தொகுதி அமைப்பாளர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வென்னப்புவ பேருந்து நிலையத்திற்கு அதிகாலை 1 மணியளவில் முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபர் மே தினம் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது கொழும்பு நோக்கி வந்த கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழப்பு
அதன்போது, குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக தகவல் ஏதும் வெளிவரவில்லை என்பது குறிப்படத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
மரண அறிவித்தல்