ஜனாதிபதி அநுர - அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் (julie chung) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதாக ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சந்திப்பில் அமெரிக்காவுக்கும் (usa) இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவை வலியுறுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு விஜயம்
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள், பொருளாதார மற்றும் சமூக ஒத்துழைப்பை வலுப்படுத்தல், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஆர்வமுள்ள துறைகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவரது விஜயத்தில் பல உயர்மட்ட கலந்துரையாடல்கள் இருக்குமென்று தெரிவிக்கப்படுகிறது.
அநுர குமார திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது வெளிவிவகார அமைச்சர் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |