மைத்திரியை திடீரென சந்தித்த அமெரிக்க தூதுவர் - பரபரப்பாகும் கொழும்பு அரசியல்
colombo
maithiripala sirisena
suddenly met
u.s ambasider
By Sumithiran
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலய்னா பி டெப்லிஸ்ட் திடீரென சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க தூதுவருடனான சந்திப்பின் பின் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அவசர அரசியல் குழு சந்திப்பு ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
இதில் மஹிந்த அமரவீர, சான் விஜேலால், துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன, சுரேன் ராகவன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு சாதாரண அரசியல் குழு சந்திப்பே என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்