ஜப்பானிய முதலீட்டாளருக்கு வழங்கப்படும் புறக்கோட்டை மிதக்கும் சந்தை!

Anura Kumara Dissanayaka Sri Lanka Japan Economy of Sri Lanka NPP Government
By Kanooshiya Nov 26, 2025 05:19 AM GMT
Report

புறக்கோட்டை மிதக்கும் சந்தை வளாகத்தை ஜப்பானிய முதலீட்டாளர் ஒருவருக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு குத்தகைக்கு விட நகர மேம்பாட்டு ஆணையம் தயாராகி வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முதலீட்டாளர் ஏற்கனவே நகர மேம்பாட்டு ஆணையத்திற்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதுடன் இந்த வளாகம் முழுவதுமாக குத்தகைக்கு விடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புறக்கோட்டை மிதக்கும் சந்தை வளாகத்திலுள்ள கடைகள் மற்றும் இரவு சந்தையை நவீனமயமாக்குவதே ஜப்பானிய முதலீட்டாளரின் திட்டம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ். நயினாதீவு குறிகட்டுவான் படகு சேவை இடைநிறுத்தம்

யாழ். நயினாதீவு குறிகட்டுவான் படகு சேவை இடைநிறுத்தம்

ஜப்பானிய முதலீட்டாளர்

தற்போதைய கடை உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் முன்னாள் நகர மேம்பாட்டு அமைச்சர் அனுர கருணாதிலகா தனது பதவிக் காலத்தில் ஜப்பானிய முதலீட்டாளரை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பானிய முதலீட்டாளருக்கு வழங்கப்படும் புறக்கோட்டை மிதக்கும் சந்தை! | Uda To Lease Pettah Floating Market To Japanese

இந்த குத்தகை தொடர்பாக நகர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் நேற்று (25.11.2025) விசேட கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியிருந்தனர்.

இந்த மிதக்கும் சந்தை வளாகம் முதன்முதலில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் கடந்த 2014 ஆம் ஆண்டு 344 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.

ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் இரண்டு பெரிய உணவகங்கள் உட்பட 92 கடைகள் உள்ளன. 2021 ஆம் ஆண்டில், நகர மேம்பாட்டு ஆணையம் இதற்காக கூடுதலாக 50 மில்லியன் ரூபாயை செலவிட்டது.

கொரோனா தொற்று மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வர்த்தகம் பாதிக்கப்பட்டதால் மிதக்கும் சந்தை குறிப்பிடத்தக்க இழப்பைச் சந்தித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும் உள்ளூர் கைவினைப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்வதற்கும் இந்த திட்டம் முதலில் திட்டமிடப்பட்டது. எனினும், வீதியோர வியாபாரிகள் இங்கு வர்த்தகம் செய்ய ஆரம்பித்ததன் மூலம் திட்டத்தின் முதன்மை நோக்கம் மாறிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், குறித்த வளாகம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பு இன்றி இயங்கி வருவதுடன் ஜப்பானிய முதலீட்டாளரின் கீழ் முழு வளாகத்தையும் நவீனமயமாக்க ஒரு புதிய திட்டம் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

யாழில் அதிகரிக்கும் காவல்துறை கெடுபிடி - விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்தநாள்

யாழில் அதிகரிக்கும் காவல்துறை கெடுபிடி - விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்தநாள்

மகிந்தவின் மொட்டுக் கட்சிக்கு தாவும் அரசியல் தலைமைகள்!

மகிந்தவின் மொட்டுக் கட்சிக்கு தாவும் அரசியல் தலைமைகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016