காணாமல் போனோர் ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதியோம்..! உதயகலா
காணாமல் போனோர் விளம்பரங்களை வைத்து வியாபாரம் செய்யவேண்டாம்.
காணாமல் போனோர் ஆர்ப்பாட்டங்கள் நடக்காது. இனி நடக்க விடவும் மாட்டோம் என சர்வ மக்கள் கட்சியின் தலைவி தயாபரராஜ் உதயகலா தெரிவித்தார்.
நாங்கள் நெருப்பு
இன்று மட்டு. ஊடக அமையத்தில் இடம்பெற்று செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர், உண்மையான காணாமல் போனோரின் உறவுகளை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “காணாமல் போனோர் விளம்பரங்களை வைத்து வியாபாரம் செய்யவேண்டாம். மீறிச்செய்தால் இதற்கான பின்விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்.
நாங்கள் நெருப்பு யாருக்கும் பயப்பட மாட்டோம்” - என்றார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்ப்பு
ஆனால், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் இவர் தெரிவித்த கருத்துக்களுக்கு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
இவர் (உதயகலா) தெரிவித்த அப்பட்டமான பொய்களுக்கு உடனடியாக அனைத்து மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கொரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
