யாழில் இருந்து பிரித்தானியாவுக்கு அழைக்கப்பட்ட சட்டத்தரணி சொல்லும் கதை!
பெண்களை மாண்பேற்றுகின்ற பெருவிழாவான சுடரி விருதுகள் 2025 ஆண்டு இரண்டாவது தடவையாக நடைபெறவுள்ளது.
பிரித்தானியாவை மையப்படுத்தி இயங்கிக் கொண்டிருக்கின்ற சுடரி அமைப்பு, மிக நீண்ட காலமாக தாயக மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களுக்காக பணியாற்றி வருகிறது.
வறுமையில் வாடுவோருக்கு, கல்வி சேவைகளுக்கு, பெண் தலைமைக் குடும்பங்களுக்கு என இவர்கள் தொடர்ச்சியாக பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள், அதன் ஒரு பகுதியே இந்த சுடரி விருதுகள்.
இலை, மறை, காயாக இருக்கின்ற பெண்களை தேடி ஊக்கப்படுத்தும் முகமாக அவர்களை சமூகத்தின் முன் நிறுத்தி சுடரி விருதுகள் அங்கீகாரத்தை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், சுடரி விருதுகளுக்காக இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ரனித்தா ஞானராஜா பிரித்தானியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா சொல்லும் கதை பின்வருமாறு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
