எலிசபெத் ராணியின் மறைவு - பிரித்தானியாவில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்
வணிக மற்றும் பொருளாதார தளத்திலும் மாற்றங்கள்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்தையடுத்து, அவரது புதல்வரான மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணைக்கு வந்திருப்பதால் பிரித்தானியாவின் வணிக மற்றும் பொருளாதார தளத்திலும் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
ராணியின் மறைவை அடுத்து புதிய மன்னர் ஆட்சிக்கு வந்திருப்பதால் ராணியின் முகத்துடன் பிரித்தானியாவில் புழக்கத்தில் உள்ள 80 பில்லியன் பவுண்ஸ் பெறுமதியில் இருக்கும் 4.5 பில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ஸ் நாணயத்தாள்கள் மற்றும் உலோக நாணயங்கள் மாற்றப்படவேண்டும்.
பழைய நாணயத்தாள்கள் மீளெடுக்கபட்டு புதிய மன்னரின் முகம் பதிக்கப்பட்ட நாணயங்கள் புழக்கத்தில் விடவேண்டும்.
பிரித்தானியாவில் ஏற்படப்போகும் மாற்றம்
ஆனால் இந்த மாற்றத்துக்கு குறைந்தது இரண்டு ஆண்டுகாலம் எடுக்கும் எனக் கூறப்படுகிறது.
அந்தவகையில் கடந்த வருடம் புழக்கத்துக்கு வந்த புதிய 50 ருபா நாணயதாள்களும் மாற்றப்படவேண்டும்.
பிரித்தானியாவில் மட்டுமல்ல கனடாவில் உள்ள சில 20 ரூபாய் நாணயத்தாள்களும் நியூசிலாந்தில் உள்ள நாணயங்களிலும், கிழக்கு கரீபியனில் புழக்கத்தில் உள்ள நாணயங்களும் மாற்றப்படவேண்டும்.
கடவுச்சீட்டு மற்றும் அஞ்சல் தலைகளிலும் மாற்றம்
இதேபோல பிரித்தானியாவில் ராணியின் உருவத்துடன் புழக்கத்தில் உள்ள அஞ்சல் தலைகளும் மாற்றப்படவேண்டும்.
இதனைவிட கடவுச்சீட்டுகளில் உள்ள ராணியை மையப்படுத்திய வார்த்தைகளும் மாற்றப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.