பிரித்தானியாவின் புதிய மன்னர் பெயர் வெளியானது
பிரித்தானியாவின் புதிய மன்னர்
பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து ராணியின் மூத்த மகனும் வாரிசுமான சார்லஸ், பிரித்தானியாவின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, ராணியின் மூத்த மகனும் வாரிசுமான சார்லஸ், முன்னாள் வேல்ஸ் இளவரசர், ஐக்கிய இராச்சியம் மற்றும் 14 கொமன்வெல்த் நாடுகளின் மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மன்னர் வெளியிட்ட அறிக்கை
இதேவேளை மன்னராக அறிவிக்கப்பட்டுள்ள சார்லஸ் தனது தாயார் இறந்ததை அடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மன்னரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
எனது அன்புக்குரிய தாய், மகா ராணியின் மறைவு, எனக்கும் எனது குடும்பத்தினர் அனைவருக்கும் மிகவும் சோகமான தருணம். “அன்பான இறையாண்மை மற்றும் மிகவும் நேசித்த தாயின் மறைவுக்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்.
"அவரது இழப்பு நாடு முழுவதும், மாநிலங்கள் மற்றும் கொமன்வெல்த் மற்றும் உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களால் ஆழமாக உணரப்படும் என்று எனக்குத் தெரியும்.
இந்த துயரம் மற்றும் மாற்றத்தினை நானும் எனது குடும்பமும் ஆறுதலால் நிலைத்திருப்போம் என்றும் அறிவித்துள்ளார்.