பிரித்தானிய அரசாங்கத்தில் புதிய அதிர்வு
United Kingdom
Rishi Sunak
By Vanan
பிரித்தானியாவின் உதவிப் பிரதமர் டொமினிக் ராஃப் இன்று தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
உதவிப் பிரதமரும் கென்சர்வேர்ட்டிவ் கட்சியின் முக்கிய பிரமுகருமான டொமினிக் ராஃப், தனக்கு கீழே பணியாற்றும் குடிசார் அதிகாரிகளை துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு வெளிவந்திருந்தது.
புதிய சலசலப்பு
இதனை அடுத்தே அவரது பதவி விலகல் இன்று இடம்பெற்றிருக்கின்றது.
இந்த நகர்வு பிரித்தானிய அரசியலில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டொமினிக் ராஃப் குறித்து பிரித்தானிய பிரதமர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நேற்று ஒரு விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இந்தப் பதவி விலகல் வந்துள்ளது.
இது மீண்டும் ஒருமுறை ரிஷி சுனக் அரசாங்கத்தில் புதிய அதிர்வுகளை கிளப்பியுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி