பிரித்தானியாவின் முதல் பெண் பிரதமர் வழியில் வென்ற லிஸ் டிரஸ்!
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பை லிஸ் ட்ரஸ் கைப்பற்றியுள்ளார்.
இதேவேளை கட்சியின் தலைவராகவும் பிரதமாரகவும் இவர் செயற்படவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை, பிரதமர் இல்லம், லிஸ் ட்ரஸ்ஸிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில், தனது வெற்றி உரையின்போது, பொரிஸ் ஜோன்சனை தனது நண்பர் என அழைத்துள்ளார். மேலும் தான் ஒரு வலுவான திட்டத்தை வெளியிட இருப்பதாகவும், வரிகள் விதிப்பதுடன், பிரித்தானிய பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
இவர் ஏழு வயதாக இருக்கம் போது பாடசாலையில், மாதிரி பொது தேர்தல் ஒன்று நடத்தப்பட்டதாகவும், அதில் பிரித்தானியாவின் முதல் பெண் பிரதமதரான மார்கரெட் தட்சர் போன்று பாவனை செய்து போட்டியிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
மார்கரெட் தட்சர் வழியில் பயணித்த லிஸ் டிரஸ்
எனினும் அவரைப் போன்று வெற்றியீட்ட முடியவில்லையென தனது தேர்தல் பிரசார மேடையில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் விடா முயற்சி காரணமாக முப்பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இரும்புப் பெண்மணியென அழைக்கப்பட்ட மார்கரெட் தட்சர் வழியைப் பின்பற்றி கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் வெற்றி வாகை சூடியுள்ளார்.
இவருக்கு தற்போது 47 வயது, பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபோர்ட்டில் பிறந்துள்ளார். தற்போது லண்டன் மற்றும் நார்ஃபோக்கில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தனது ஆரம்ப கல்வியை லீட்ஸில் உள்ள ரௌண்ட் ஹே பாடசாலையில் பயின்றுள்ளார். பின்னர் பட்டப்படிப்பை ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.