வெளிநாடொன்றில் இருக்கும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
லெபனானில் (Lebanon) தங்கியிருக்கும் பிரித்தானிய நாட்டு மக்களை உடனடியாக அந்நாட்டைவிட்டு வெளியேறுமாறு பிரித்தானிய (UK) அரசு வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் (Israel) மற்றும் லெபனான் நாடுகளக்கிடையே தற்பொழுது நிலவி வரும் மோதல் சூழ்நிலையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பிரித்தானிய வெளியுறவுச் செயலரான டேவிட் லாம்மி (David Lammy) தெரிவிக்கையில், லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல் அவ்வப்போது நடந்துவருவதாகவும், நிலைமை எப்போது வேண்டுமானாலும் மோசமாகலாம் என குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய அரசு
இந்த நிலையில், அனைத்து வகையான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்குமாறு வெளியுறவு அலுவலக தூதரகக் குழுவினரைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த பதற்றம் மேலும் அதிகரிக்குமானால், லெபனானிலிருக்கும் அனைவரையும் வெளியேற்றுவது தொடர்பில் பிரித்தானிய அரசு உறுதியளிக்கமுடியாது எனவும், மக்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |