அமெரிக்காவின் எச்சரிக்கையை தொடர்ந்து பிரித்தானியா வெளியிட்ட அறிவிப்பு
அறுகம்பே பகுதிக்கான அமெரிக்க (US) தூதரகம் விடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் பிரித்தானிய (UK)அரசாங்கம் இலங்கைக்கான பயண ஆலோசனைகளையும் புதுப்பித்துள்ளது.
அறுகம்பே பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், அப்பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இலஙகையில் தங்கியுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
மத்திய கிழக்கில் தொடரும் பதற்றத்தை அடிப்படையாக வைத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
UK Travel Advice for Sri Lanka has been updated. Ensure you are familiar with our advice and follow our guidance on safety and security. https://t.co/cxgzYCPU49
— UK in Sri Lanka 🇬🇧🇱🇰 (@UKinSriLanka) October 23, 2024
இந்த நிலையில், அமெரிக்கப் பிரஜைகள் குறித்த பகுதியில் ஏதேனும் நெருக்கடிகளை சந்தித்தால் உடனடியாக 119 மூலம் உள்ளூர் அதிகாரிகளுக்கு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பலபடுத்தப்பட்ட பாதுகாப்பு
இதேவேளை, அறுகம்பே சுற்றுலாப் பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக சுமார் 500 காவல்துறை அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.
அறுகம்பே மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவலுக்கமைக்கமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |