இலங்கைக்கான மனிதாபிமான உதவித் தொகையை அதிகரித்தது பிரித்தானியா
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், இதற்கு முன்னர் 675,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் மனிதாபிமான உதவியை வழங்குவதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது அந்த தொகையை 10 இலட்சம் ஸ்டெர்லிங் பவுண்டுகளாக அதிகரித்துள்ளது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம்
இது குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “1.8 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாங்கள் இப்போது கூடுதல் நிதியை வழங்குகிறோம்.

பிரித்தானியா ஆதரவை 1 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகளாக ($1.32 மில்லியன்) அதிகரித்து வருகிறோம். செஞ்சிலுவைச் சங்கம், UNOPS,Vriddhi மற்றும் நிவாரண கூட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவால் வழங்கப்பட்ட அவசர அனர்த்த நிவாரணங்கள், அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |