ரிஷி சுனக்கின் புகைப்படத்தை தெருத்தெருவாக ஏற்றித்திரிந்து கேலிக்குட்படுத்திய பிரித்தானிய நிறுவனம்!
பிரித்தானியாவின் அடுத்த பிரதமராவார் என சமீப நாட்கள் வரை கொண்டாடப்பட்ட ரிஷி சுனக்கை, வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று, அவமதித்து, கேலி செய்யும் வகையிலான புகைப்படத்தை விளம்பரப்படுத்தியுள்ளது.
பிரித்தானியவின் பிரபல வேலைவாய்ப்பு நிறுவனமான, CV Library என்ற நிறுவனமே ரிஷி சுனக்கின் படத்தை பெரிதாக போட்டு, அதன் பக்கத்தில், வேலை கிடைக்கவில்லையா, எங்களிடம் எல்லாருக்குமான வேலை வாய்ப்புக்கள் உள்ளன அவற்றில் உங்களுக்கானதைத் தேர்வு செய்யுங்கள் என காட்சிப்படுத்தியுள்ளது.
தெருத்தெருவாக சுற்றி வந்த விளம்பரம்
இவ்வாறு எழுதப்பட்ட விளம்பரப் பலகைகளை வாகனத்தில் ஏற்றி தெருத்தெருவாக சுற்றி வரச் செய்துள்ளது. இதனை அவதானித்த மக்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
அதுமட்டுமன்றி அந்த விளம்பரம் தொடர்பில் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மக்கள், இது அவமரியாதையான செயல் என தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
அதேவேளை அந்த புகைப்படத்தில் இருப்பது ரிஷியாக இருந்தாலும் சரி, மார்கரட் தாட்சராக இருந்தாலும் சரி, அவர்கள் பொது வாழ்க்கையில் இருக்கிறார்கள் என்பதற்காக இப்படிச் செய்யலாமா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
பொரிஸ் ஜோன்சனையும் கேலி செய்த நிறுவனம்
மேலும் அவ்வாறு விளம்பரப்படுத்தியவர்களை நோக்கி, உங்கள் பிள்ளை வேலை தேடிப்போன இடத்தில் அவருக்கு வேலை கிடைக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம், அதைக் கேட்டு நாம் கேலி செய்து சிரிக்கவா செய்வோம்? எனவும் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
As the news breaks that Rishi Sunak didn't get the PM job - recruitment firm CV Library tours Parliament Square with a cheeky, responsive digital ad.
— Famous Campaigns (@famouscampaigns) September 5, 2022
source: @AlexofBrown pic.twitter.com/HNxWYbjV6t
இதேவேளை அந்த வேலைவாய்ப்பு நிறுவனம் கேலி செய்யும் முதல் நபர் ரிஷி சுனக் அல்ல, பிரித்தானிய பிரதமராக இருந்த பொரிஸ் ஜோன்சன் தனது பதவி விலகிய போதும், பதவி விலகி விட்டீர்களா? எங்களிடம் எல்லாருக்குமான வேலைகள் உள்ளன என தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
