ரிஷி சுனக் உக்ரைனுக்கு திடீர் பயணம்
பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் இன்று உக்ரைனுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன்போது உக்ரைனின் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸகியை தலைநகர் கியேவில் சந்தித்து பேச்சுக்களை நடத்தியதுடன், ரஷ்ய வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் உக்ரைனுக்கு 50 மில்லியன் பவுண்ஸ் பாதுகாப்பு உதவியை வழங்குவதாக உறுதியளித்தார்.
முதல் விஜயம்
ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்ற பின்னர் உக்ரைனுக்கு மேற்கொண்ட முதல் விஜயத்தின் போது பிரித்தானியா தொடர்ந்து உக்ரைனுக்கு துணை நிற்கும் என்ற செய்தியையும் வழங்கியிருந்தார்.
அண்மைய நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி அதன் மின்உற்பத்திக்கட்டமைப்பில் 50 வீத்துக்கு மேல் அழித்துள்ளது.
இந் நிலையில் 125 விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மற்றும் ஆளில்லா வான்கலங்களை அழிக்கும் பொறிமுறையை பிரித்தானியா வழங்குவதாக சுனக் இன்று அறிவித்துள்ளார்.
