இங்கிலாந்தை மிரட்டும் கொரோனா -24 மணிநேரத்தில் ஒரு இலட்சத்தை கடந்த தொற்றாளர்கள்
corona
uk
increase
By Sumithiran
இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரேநாளில் புதிதாக 1,02,292 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,61,49,319 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 346 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 54 ஆயிரத்து 702 ஆக உயர்ந்துள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 27 லட்சத்து 81 ஆயிரத்து 312 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 32,13,305 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
