260 உயிர் பறிபோன ஏர் இந்தியா விமான விபத்து! போயிங் நிறுவனத்திற்கு வழக்கு
260 பேரை பலிகொண்ட ஏர் இந்தியா விபத்தில் இறந்த நான்கு பயணிகளின் குடும்பத்தினர் போயிங் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
போயிங் மற்றும் விமான பாகங்கள் உற்பத்தியாளரான ஹனிவெல்லுக்கு எதிராக இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதம், இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
விமான விபத்து
விமானத்தில் இருந்த ஒருவரைத் தவிர மற்ற அனைவரும், விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் இருந்தவர்கள் உட்பட 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
விமானத்தில் ஏற்பட்ட குறைபாடு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறி, விமானத்தின் தயாரிப்பாளரான போயிங் மற்றும் விமான பாகங்கள் தயாரிப்பாளரான ஹனிவெல் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
