இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியது பிரித்தானியா
United Kingdom
Israel
Rishi Sunak
Israel-Hamas War
By Sumithiran
அமெரிக்காவை தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக கிழக்கு மத்தியதரைக் கடலில் கண்காணிப்பு விமானம் மற்றும் இரண்டு ரோயல் கடற்படை கப்பல்களை இங்கிலாந்து அனுப்பவுள்ளது.
"பயங்கரவாத குழுக்களுக்கு ஆயுதங்களை மாற்றுவது போன்ற பிராந்திய ஸ்திரத்தன்மைக்கான அச்சுறுத்தல்களைக் கண்காணிக்க" இந்த விமானம் நாளை ரோந்துப் பணியைத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்ட தகவல்
"இந்த வாரம் நாங்கள் பார்த்த பயங்கரமான காட்சிகள் மீண்டும் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்." என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அனுப்பிய நாசகாரி
ஏற்கனவே அமெரிக்கா மத்திய தரைக்கடல் பகுதிக்கு ஒரு நாசகாரி கப்பலை அனுப்பியுள்ள நிலையில் மற்றுமொரு கப்பலை அனுப்ப ஆலோசித்து வரும் நிலையில் தற்போது பிரித்தானியாவும் கப்பல்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்களை அனுப்புகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் ஆண்டு திவச அழைப்பிதழ்