பிரித்தானியாவில் பணிபுரிய விரும்புவோரிற்கு பேரிடி!
பிரித்தானியாவில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கான விசா கட்டணம்(Work Visa Fee) உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரிஷி சுனக்(Rishi Sunak) அரசாங்கம் பிரித்தானியாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில் இந்நடவடிக்கை இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி,வேலை செய்ய வருபவர்களுக்கான விசா கட்டணம் 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருக்கும் திறமையானவர்களுக்கான வேலை விசா 13,380 பவுண்ட் ஆக இருந்தது.
38,700 பவுண்ட்
அதன் பின்னர் 2022 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 21,837 ஆக உயர்ந்தது. இதன்மூலம் 63 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
பிரித்தானிய அரசு தங்கள் நாட்டில் பணிபுரிய தேவைப்படும் சிறப்பு திறன் பணியாளர் விசாவை பெற, ஆண்டு ஊதியமாக ஒவ்வொரு நபரும் 26,200 பவுண்ட் (இந்திய மதிப்பில் 27 இலட்சம்) பெற வேண்டும் என முன்னர் கூறியிருந்தது.
எனினும், தற்போது இந்த ஊதியம் 38,700 பவுண்ட் ஆக மாற்றப்பட்டுள்ளதன் மூலம் சுமார் 50 சதவீத உயர்வை காட்டியுள்ளது.
இதன் காரணமாக வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களைச் சார்ந்தவர்களை அழைத்து வர முடியாது என தெரிவிக்கப்படுகிறது. எனினும் சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத் துறையில் உள்ளவர்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தாதது என கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |