இங்கிலாந்தில் வானிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவின் (United Kingdom) பல பகுதிகளுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் சூறாவளி ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வசந்த காலத்தின் தொடக்கம் வழக்கத்திற்கு மாறாக வறண்டிருந்த நிலையில், இது கோடையில் வறட்சிக்கு வழிவகுக்குமோ என்ற கவலையை எழுப்பியிருந்தது.
வானிலை ஆய்வு
வானிலை ஆய்வு மையத்தின் (Met Office) வானிலை ஆய்வாளர் அலெக்ஸ் பர்கில் இது தொடர்பில் தெரிவிக்கையில், இங்கிலாந்தின் வடக்குப் பகுதிகளில் நல்ல சூரிய வானிலை நிலவும் நிலையில், தென் கிழக்குப் பகுதிகளில் ஃபனல் கிளவுட் (funnel cloud) அல்லது ஒரு சிறிய சூறாவளி கூட ஏற்படக்கூடும்.
குறிப்பாக தென் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழைக்கும் வாய்ப்புள்ளதுடன் தொடர் மழையும் எதிர்பார்க்கப்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளில் இல்லாத அளவு வறண்ட வசந்த காலத்திற்குப் பிறகு தற்போது மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
