ரஷ்ய துருப்புக்களை உயிருடன் சிறைபிடித்த உக்ரைன் படையினர்!
ரஷ்யா- உக்ரைன் இடையே இன்று போர் தொடங்கியது. உக்ரைன் மீது ரஷ்ய நாட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் தீவிரமான படை நடவடிக்கையின் போது ரஷ்ய துருப்புக்களை உக்ரைன் படையினர் உயிருடன் சிறைபிடித்துள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கீவ்வை இலக்கு வைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. எனினும் உக்ரைன் படைகளுடன் அமெரிக்க ஆதரவு கிளர்ச்சி படையின் தாக்குதலில் ரஷ்யா பெரும் இழப்புக்களை சந்தித்துள்ளதாக தெரிய வருகிறது.
தலைநகர் கீவ்வின் சில பகுதிகளை ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட போதும், பதிலடி காரணமாக மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் உக்ரைன் படைகள் கொண்டு வந்துள்ளன.
இதேவேளை உக்ரைனின் பதிலடி காரணமாக ரஷ்யாவின் 8 வானூர்திகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ரஷ்ய படைகளின் தாக்குதலில் 50 உக்ரைன் இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 10 பொது மக்களும் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
Soldiers of the 93rd Mechanized Brigade captured two Russian occupiers, they were from 423rd Yampol Motorized Rifle Regiment, military unit 91701. pic.twitter.com/UJzypYXWmm
— Defence of Ukraine (@DefenceU) February 24, 2022
