ஒன்பதாயிரம் ரஷ்ய வீரர்களை வீழ்த்தியது உக்ரைன் - பாதுகாப்புத்துறை அமைச்சகம் பகிரங்க அறிவிப்பு
உக்ரைன் - ரஷ்யா யுத்தத்தில் உக்ரைன் இதுவரை எதிர்த்தாக்குதலில் ஒன்பதாயிரம் வீரர்களை வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை(24) தாக்குதலைத் தொடங்கியது, இன்று எட்டாவது நாளாக யுத்தம் நடைபெற்று வருகிறது.
உக்ரைன் எளிதாக வீழ்ந்துவிடும் என ரஷ்யா நினைத்தது. ஆனால், கடைசிவரை போராடுவோமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி (Zelenskyy) அறிவித்த நிலையில் உக்ரைன் இராணுவம் எதிர்த் தாக்குதலை நடாத்தி வருகிறது.
மேற்குலக நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் உக்ரைன் எதிர்த்தாக்குதலை அதிகரித்துள்ளது. ஊருக்குள் புகுந்த ரஷ்ய துருப்புக்களை உக்ரைன் இராணுவம் வீழ்த்தி வருகிறது.
மேலும், 30 விமானங்கள், 31 ஹெலிகொப்டர்கள், 217 பீரங்கிகள், 374 இராணுவ வாகனங்களை அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதனால் ரஷ்யாவிற்கு இழப்பு அதிகமாகி வருகிறது. இதனால் வீரர்கள், விமானங்கள், ஹெலிகொப்டர்கள் என ரஷ்யா இழப்புக்களைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில் தாங்கள் தொடர்ந்தும் போராடுவோம் என்றும். நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
