புடின் உயிருடன் இல்லை: தக்க ஆதாரங்களை வெளியிட்ட உக்ரைன்
ரஷ்யாவின் அதிபர் புடின் ஏற்கனவே உயிரிழந்திருக்கலாம் அல்லது மிகவும் மோசமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உக்ரைன் உளவுத்துறைத் தலைவர் ஜெனரல் கைரிலோ புடானோவ் கூறியுள்ளார்.
புடினை நாம் கடைசியாக 2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 26ஆம் திகதியே பார்த்தோம். அதற்குப் பிறகு அவர் என்ன ஆனார், அவர் உயிருடன் இருக்கிறாரா, அல்லது மோசமான உடல் நிலையில் உள்ளாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
காணொளி ஆதாரம்
சமீபத்தில் வெளியான காணொளி ஆதாரம் ஒன்றை சுட்டிக் காட்டிய புடானோவ், அந்த காணொளியில் புடின் மணி பார்ப்பதற்காக தனது இடது கையில் கைக்கடிகாரத்தைத் தேடுவதைக் காணலாம்.
இடது கையில் கடிகாரத்தைக் காணாமல் அவர் குழப்பமடைவதை அந்த வீடியோவில் காணலாம் என்றார். விடயம் என்னவென்றால், புடின் வலது கையில் கைக்கடிகாரம் கட்டும் பழக்கம் உடையவர்.
புடினுடைய டூப்
அப்படியிருக்கும்போது, வீடியோவில் தோன்றும் புடின் இடது கையில் கடிகாரத்தைத் தேடுவதால், அது புடினே அல்ல, அது அவருடைய டூப் என கைரிலோ புடானோவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஒவ்வொரு முறை தொலைக்காட்சியில் தோன்றும் போதும், அவரது முகத்தின் பல மாற்றங்கள் காணப்படுவதால் உண்மையாகவே தொலைக்காட்சியில் தோன்றுவது புடின் அல்ல, அவரது டூப் என்ற கருத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
புடின் வலது கையில் கைக்கடிகாரம்
புடின் உண்மையிலே வலது கையில் கடிகாரம் காட்டும் பழக்கம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.