புடினுக்கு தோல்வி நிச்சயம் - இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு
russia
ukraine
putin
fail
invasion
By Sumithiran
உக்ரைனுடனான மோதலில் ரஷ்ய அதிபர் புடின் தோல்வியடைவார் என்று இங்கிலாந்து பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகின்றன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. இதனால் போர்க்களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய அதிபர் புடின் தோல்வியடைவார் என்று இங்கிலாந்து பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், உக்ரைனில் பயங்கரமான மோதல் நடைபெற்று வரும் நிலையில் இதில் புடின் தோல்வியடைவார். நமது உக்ரைன் நண்பர்களுக்கு நாம் தொடர்ந்து உதவுவோம். எவ்வளவு நாட்கள் செல்கிறது அவ்வளவு நாட்கள் நாம் தொடர்ந்து உதவிகளை செய்வோம்’ என்றார்.
