ரஷ்யாவின் சோதனை களமாக மாறிய உக்ரைன்: பீதியில் ஜெலன்ஸ்கி
ரஷ்யா (Russia) தனது ஆயுதங்களுக்கான சோதனைக் களமாக உக்ரைனை (Ukraine) பயன்படுத்தி வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த வாரத்தில் மாத்திரம் நாடு கிட்டத்தட்ட 500 ட்ரோன்கள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளால் ரஷ்யாவால் குறிவைக்கப்பட்டதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உக்ரைனின் டினிப்ரோவில் ஓரெஷ்னிக் பலிஸ்டிக் ஏவுகணையை ரஷ்யா முதன்முதலில் பயன்படுத்தியது உலக கவனத்தை ஈர்த்தது.
ஈரானிய ட்ரோன்கள்
அத்தோடு, ஷாஹெட் ட்ரோன் தாக்குதல்களின் அளவும் அதிகரித்து வருவதாகவும் ஜெலன்ஸ்கி ஞாயிற்று கிழமை சுட்டிக்காட்டிள்ளார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 73 ட்ரோன்களில் ஐம்பது ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முந்தைய வாரத்தில் ஈரானால் வடிவமைக்கப்பட்ட 460 ட்ரோன்கள் உக்ரைனின் வான்வெளியில் ரஷ்யாவால் ஏவப்பட்டன என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் முயற்சி
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜெலன்ஸ்கி ,“உக்ரைன் ஆயுதங்களுக்கான சோதனைக் களம் அல்ல. உக்ரைன் ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திர நாடு.
ஆனால் எங்கள் மக்களைக் கொல்வதற்கும், அச்சத்தையும் பீதியையும் பரப்பி, எங்களை பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகளை ரஷ்யா இன்னும் தொடர்கிறது” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |