ரஷ்யாவிற்கு பாரிய சேதம் -உக்ரைன் வெளியிட்ட புள்ளிவிபரம்
russia
ukraine
lost
invasion
By Sumithiran
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து சுமார் 14,200 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன.
மேலும் 93 ரஷ்ய விமானங்கள் மற்றும் 112 ஹெலிகொப்டர்களுடன் 450 ரஷ்ய டாங்கிகள் மற்றும் சுமார் 1,450 மற்ற கவச போர் வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
72 ஏவுகணை ரொக்கெட் அமைப்புகள் மற்றும் 43 விமான எதிர்ப்பு ஆயுத அமைப்புகளுடன் 205 ரஷ்ய பீரங்கி அமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஆனால் இதனை உறுதி செய்யமுடியவில்லை.
அமெரிக்க மற்றும் நேட்டோ அதிகாரிகளின் தகவல்களின்படி, ரஷ்யாவின் உயிரிழப்புகள் 3,000 முதல் 10,000 வரை இருக்கும் என்று அமெரிக்க மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி