நான் நாட்டைவிட்டு தப்பி ஓடவில்லை! அதிரடியாக காணொலியை வெளியிட்ட உக்ரைன் அதிபர்
தான் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக நொடிக்கு நொடி புரளி பரவி வருவதாகவும், யாரும் எங்கேயும் தப்பி ஓடவில்லை என்றும் உக்ரைன் அதிபர் வொளாடிமிர் ஜெலன்ஸ்கி (Vladimir Zhelensky) தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் அதிபர் நாட்டைவிட்டு போலந்துக்கு தப்பி ஓடியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதை மறுத்துள்ளார் அதிபர் ஜெலன்ஸ்கி சமூக வலைத்தளத்தில் காணொலி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தான் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக நொடிக்கு நொடி புரளி பரவி வருவதாகவும், யாரும் எங்கேயும் தப்பி ஓடவில்லை என்றும் கூறி உள்ளார். ‘நான் கீவ் நகரில்தான் இருக்கிறேன்.
இங்கிருந்துதான் எனது பணிகளை மேற்கொள்கிறேன்’ என்றும் அவர் தனது காணொலியில் குறிப்பிட்டுள்ளார்.
Терміново! pic.twitter.com/MuXfniddVT
— Володимир Зеленський (@ZelenskyyUa) March 4, 2022
இதனுடன் தொடர்புடைய பிற செய்திகளை காண்க
உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம் - ரஷ்யாவின் பகிரங்க அறிவிப்பு! (காணொலி)
