ரஷ்ய படைக்கு பாரிய அடி - தலைநகரை முழுமையாக மீட்டது உக்ரைன் இராணுவம் - வீதியில் சிதறி கிடக்கும் சடலங்கள்(photos)
உக்ரைன் இராணுவம் தலைநகர் கீவ் பிராந்தியத்தின் முழுப் பகுதியையும் மீண்டும் கைப்பற்றி உள்ளதாக அந்நாட்டு துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இராணுவத்திடம் இருந்து, கீவ் அருகே உள்ள புச்சா நகரத்தை உக்ரைன் படைகள் கைப்பற்றிய பின்னர், அங்கு ஒரே தெருவில் குறைந்தது 20 ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன என்று AFP செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அதில் ஒருவரின் உடலில் கைகள் கட்டப்பட்டிருந்ததாகவும், தலைநகரின் வடமேற்கே புறநகர் நகரத்தில் குடியிருப்புப் பாதையில் பல நூறு மீட்டர்கள்அளவுக்கு அந்த சடலங்கள் சிதறி கிடந்ததாகவும் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
18 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண்களும் ரஷ்ய சிப்பாய்களால் தூக்கிலிடப்பட்டதாக உக்ரைன் இராணுவ தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நகரத்தில் உள்ள ஒரு புதை குழியில் 280 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புச்சா நகர மேயர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பிரபல புகைப்பட கலைஞரான மாக்ஸ் லெவின், தலைநகர் கீவ் அருகே உள்ள கிராமம் ஒன்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





