பெரும் வீழ்ச்சியை நோக்கி ரஷ்யா- அமெரிக்காவிடம் அடி பணிந்தாரா புடின்?
பொருளாதாரத் தடை விதிப்பதை தள்ளி வைக்குமாறு அமெரிக்காவிடம் ரஷ்யா வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விற்பனை சந்தையையும் முடக்கி உள்ளது.
அமெரிக்காவின் நடவடிக்கையால் ரஷ்யாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விற்பனையை முடக்குவதன் மூலம் உலக சந்தை பெரும் பாதிப்பை சந்திக்கும். இந்த பாதிப்பு மேற்கத்திய நாடுகளிலும் எதிரொலிக்கும். எங்களை முடக்க நினைத்தால் நாங்கள் மாற்று வழிகளை யோசிப்போம்.
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதன் விளைவுகள் என்னவாகும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ரஷ்யா என்ன செய்யப் போகிறது என்பதை உலகமே கவனித்து கொண்டிருக்கிறது.
உலக நாடுகள் மத்தியில் ரஷ்யா, தனது நலனையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். இதற்காக ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பதை தள்ளிவைக்க வேண்டும்.
ரஷ்யா மீது அமெரிக்கா நேரடி போரை நடத்துவதற்கு பதில் பொருளாதார போரை நடத்துகிறது. இதனை அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். உலக சந்தையில் ரஷ்யாவின் பணப் பரிமாற்றத்தை முடக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும்.
இது மேற்கத்திய நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்கா இதனை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
