உக்ரைன் அதிபர் தொடர்பிலான இரகசிய செய்தி கசிவு..!
உக்ரைன் அதிபர் தொடர்பிலான இரகசிய செய்தி ஒன்று வெளியானதைத் தொடர்ந்து, ஜேர்மன் காவல்துறையில் பரபரப்பு உருவாகியுள்ளது.
உக்ரைன் அதிபராக வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இம்மாதம் ஜேர்மன் தலைநகரான பெர்லினுக்கு வருகை புரியும் இரகசிய திட்டம் ஒன்று காணப்பட்டுள்ளது.
ஆனால், அந்த செய்தி உள்ளூர் ஊடகம் ஒன்றில் வெளியாகிவிட்டது.
இரகசிய செய்தி
ஜேர்மன் அதிபரின் வருகை குறித்து இதுவரை யாருக்கும் அதிகாரப்பூர்வ தகவல் கொடுக்காத நிலையில், காவல்துறைக்கு மட்டுமே தெரிந்த அந்த தகவல் ஊடகங்களுக்கு கசிந்ததால் ஜேர்மன் பாதுகாப்பு தரப்பில் பரபரப்பு உருவாகியுள்ளது.
ஆக, காவல் துறையில் உள்ள யாரோ ஒருவர்தான் இந்த இரகசிய செய்தியை வெளியிட்டிருக்களாம் என காவல்துறையினர் கருதுகிறார்கள்.
இது குறித்து பேசிய பெர்லின் காவல்துறை தலைவரான Barbara Slowik,
சம்பவம் தொடர்பாக விசாரணை
ஒரு ஊழியர் மொத்த பெர்லின் காவல்துறைக்கும் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் அவமானத்தை உருவாக்கிவிட்டார் என்பதை என்னால் சகித்துக்கொள்ள இயலவில்லை என்று கூறியுள்ளார்.
அவர் செய்த செயலால் எப்படிப்பட்ட ஏற்படவிருக்கும் பின்விளைவுகள் ஏற்படும் என்பது அவருக்கு தெரியாததாலேயே அவர் அப்படிச் செய்திருப்பார் என்று நினைக்கிறேன்.என கூறியுள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபரின் இரகசியப் பயணம் குறித்த செய்தி வெளிவந்ததால், உக்ரைன் தரப்பு விரக்தியடைத்துள்ளதாக ஜேர்மன் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
