உக்ரைன், ரஷ்ய யுத்தம் - இன்றுடன் ஓராண்டு பூர்த்தி : அதிபர் புடினின் அறிவிப்பு!
உக்ரைனின் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடங்கி இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.
இதேவேளை, உக்ரைனில் ரஷ்யாவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டு விட்டது என ரஷ்ய அதிபர் புட்டின் தெரிவித்துள்ளார்.
இராணுவச் சாதனைகளைக் கொண்டாடும் நிகழ்வில் கலந்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புட்டின்
மேலும் அவர், போரில் இறந்த இராணுவ வீரர்களின் கல்லறை வளாகத்துக்குச் சென்ற ரஷ்ய அதிபர் அங்கிருந்த இராணுவர் வீரர் ஒருவரின் கல்லறையில் மலர் தூவி, வெற்றிக்கு எப்போதும் தளராத ஒருமைப்பாடே முக்கியம் எனக் கூறியுள்ளார்.
உக்ரைனின் மீதான படையெடுப்பை இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஸிப் படைகளுக்கு எதிரான ரஷ்யாவின் போருடன் ஒப்பிட்டும் பேசியுள்ளார்.
அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி
இதேவேளை, போரில் உக்ரைன் நிச்சயம் வெற்றி பெறும் என உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியும் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
