ரஷ்யாவிடமிருந்து கச்சாய் எண்ணெய் வாங்குவதை நிறுத்துக- விடுக்கப்பட்டது அழைப்பு!
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும் இதுவரை மேற்கத்திய தடைகள் ரஷ்யாவின் எரிசக்தித் துறையை குறிவைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ரஷ்யாவிற்கு மேற்கத்திய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகள் தேவையில்லை என ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் அறிவித்த பொருளாதாரத் தடைகளையடுத்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எது எவ்வாறிருப்பினும் விளாடிமிர் புடின் வரையறுத்த இலக்குகளை அடையும் வரை ரஷ்யா, உக்ரைன் மீதான படையெடுப்பை தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டில் விளாடிமிர் புடினால் பிரதமராக பதவி நீக்கம் செய்யப்பட்டு இப்போது ரஷ்யாவின் பாதுகாப்பு சபையின் தலைவராக மெட்வடேவ் பணியாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
