உக்ரைன் உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!
ரஷ்யா நாட்டை இரண்டு துண்டாக பிரிக்கலாம் என உக்ரைன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனை முழுமையாக கைப்பற்ற முடியாததால் நாட்டை இரண்டு துண்டாக பிரிக்க ரஷ்ய அதிபர் புடின் திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் உளவுத்துறைத் தலைவர் கிய்லொ படனொவ் தெரிவித்துள்ளார்.
அதன்படி கொரிய தீபகற்பத்தில் உள்ள வடகொரியா, தென்கொரியா போன்று உக்ரைனை இரு துண்டாக பிரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
உக்ரைனின் முழுமையான பகுதிகளை கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்த புதின் நாட்டை இரண்டாக பிரிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் ரஷ்யாவால் உக்ரைனை முழுமையாக கைப்பற்ற முடியவில்லை.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து தொடர்ந்து உக்ரைன் ஆயுத உதவிகளைப் பெற்று போரிட்டு வருகிறது. இதனால், சண்டை தொடர்ந்து நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
