திடீரென தீவிரமடையும் உக்ரைன் போர் - ஒரே நாளில் கொல்லப்பட்ட பலநூறு ரஷ்ய வீரர்கள்
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைனிய தரப்புகள் தெரிவிக்கின்றன.
ஜெலென்ஸ்கியின் ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை தொடர்ந்து உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தற்போது மீண்டும் தீவிர கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக நேற்றிரவு உக்ரைனிய நகரங்களை 54 காமிகேஸ் ட்ரோன்கள் சுற்றி வளைத்த நிலையில், அதில் 52 காமிகேஸ் ட்ரோன்களை உக்ரைன் விமானப் படை சுட்டு வீழ்த்தியுள்ளது.
400க்கும் மேற்பட்டோர்
இருப்பினும் ரஷ்யாவின் இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக உக்ரைன் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், போர் தொடங்கிய நாள் முதல் இன்று வரை சுமார் 206,600 ரஷ்ய வீரர்கள் உக்ரைனில் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதில் 400க்கும் மேற்பட்டோர் கடந்த 24 மணி நேரத்தில் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, இந்த சண்டையில் 3 டாங்கிகள், 7 ஆயுத கவச வாகனங்கள், 11 பீரங்கி அமைப்புகள், 3 ஆளில்லா வான் தாக்குதல் வாகனங்கள், 9 வேன்கள் மற்றும் டாங்கிகள் அத்துடன் 2 படை அலகுகள் கொண்ட சிறப்பு உபகரணங்களை கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய படைகள் இழந்து இருப்பதாக உக்ரைனிய தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
