உக்ரைனுக்காக கைகொடுக்கும் மிக முக்கிய வல்லரசு நாடு - வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான ஆயுதங்கள்
Russo-Ukrainian War
United States of America
Ukraine
By pavan
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் ஓராண்டை கடந்தும் தற்போது மீண்டும் வலுவடைந்து வருகிறது.
இந்தப் போரை பயன்படுத்தி பல நாடுகள் தமக்கு தேவையானவற்றை சுலபமாக பெற்று வருகின்றது.
அந்தவகையில், போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்தேய நாடுகள் ஆயுதங்கள், தளவாட உதவிகளைச் செய்து வருகின்றன.
இதுவரை 2 லட்சம் கோடி ரூபாய்
குறிப்பாக உக்ரைனுக்கு புதிதாக சுமார் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதில் ரொக்கட் லோஞ்சர்கள், பீரங்கிக்கான வெடிமருந்துகள் ஆகியவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கத் துவங்கியதில் இருந்து இதுவரை அமெரிக்கா 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
