வலுக்கும் உக்ரைன் ரஷ்யப்போர் - ரஷ்யா இழந்த மிக முக்கிய தளபதி!
நாளுக்கு நாள் வலுக்கும் உக்ரைன் ரஷ்யப் போரின் தொடர்ச்சியாக ரஷ்யாவின் மூத்த தளபதி ஜெனரல் செர்ஜி கோரியாச்சேவ் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனின் தெற்கு டொனெட்ஸ்க் பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதலிலேயே கோரியாச்சேவ் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
52 வயதான இவர், போரில் பலியானதாக ரஷ்யா அதிகாரபூர்வமாக வகைப்படுத்திய 11 ஜெனரல்களில் ஒருவர் ஆவார்.
மேலும் இவர், படையெடுப்பின் தொடக்கத்தில் 5 ஆவது இராணுவ படைப்பிரிவின் தளபதியாக இருந்ததாகவும் போரின் போது அவர் இராணுவத் தலைவர் பதவிக்கு உயர்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Another Russian general killed in Ukraine
— NEXTA (@nexta_tv) June 12, 2023
During the Ukrainian counteroffensive, Russia lost another general. Maj. Gen. Sergei Goryachev, chief of staff of the 35th Field Army, died after a missile attack on July 12, Z-propagandists reported.
At the beginning of the invasion… pic.twitter.com/erNQ6uhqxX
ரஷ்யாவின் இன்றைய தாக்குதல்
இந்த நிலையில், இன்றையதினம் உக்ரைன் அதிபர் வெலோடிமீர் ஜெலென்ஸ்கியின் சொந்த நகரத்தின் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளதுடன், 25 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
