ஐரோப்பிய ஒன்றியத்திடம் உக்ரைன் அதிபர் கூறிய செய்தி
எங்களை யாரும் உடைக்க முடியாது - நாங்கள் பலமாகவே இருக்கிறோம் என உக்ரைன் அதிபர் விளாடிமீர் ஜெலன்ஸ்கி (Wladimir Selenski) கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இன்று காணொளி காட்சி ஊடாக, உரையாற்றும் போது உக்ரைன் அதிபர் தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
''ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடாக மாறி உள்ளது. கார்கிவ் மத்திய சதுக்கத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் வெளிப்படையான பயங்கரவாதம். இது ஒரு 'போர் குற்றம்'
எங்கள் நகரங்கள் முற்றுகையிடப்பட்டாலும் நிலம், சுதந்திரத்திற்காக நாம் போராடுகிறோம்.
நீங்கள் உக்ரைனுடன் இருப்பதை நிரூபிக்க வேண்டுமென'' ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஜெலென்ஸ்கி அழுத்தமாக தெரிவித்தார்.
ஆனாலும், ரஷ்யா போரை தொடரும் எனவும், அதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
