நீடிக்கும் போர்ப் பதற்றம்- மத்திய வங்கியின் உறவைத் துண்டிக்கும் இங்கிலாந்து!
மொஸ்கோவின் நிதி நிறுவனங்களை மேற்கத்திய சந்தைகளில் இருந்து துண்டிக்கும் நடவடிக்கையாக, ரஷ்யாவின் மத்திய வங்கி சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு தடை விதிப்பதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் பிரிட்டிஷ் நிதி நிறுவனங்களை மொஸ்கோவின் நிதி அமைச்சகம் மற்றும் அதன் இறையாண்மை நிதியுடனான பரிவர்த்தனைகளிலிருந்தும் தடை செய்யும், அத்துடன் ரஷ்ய நிறுவனங்கள் இங்கிலாந்தில் மாற்றத்தக்க பத்திரங்கள் மற்றும் பணச் சந்தை கருவிகளை வழங்குவதையும் தடுக்கும்.
இதேவேளை மேலும் பொருளாதார தடைகள் இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தின் இந்த நடவடிக்கை ரஷ்யா மீது அதிக செலவுகளை சுமத்தும்.
அத்துடன் இந்த மோதல் நீடிக்கும் வரை சர்வதேச நிதி அமைப்பில் இருந்து அவளை துண்டித்துவிடும் என்று நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
