உலகுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புடினின் புகைப்படம்
ரஷ்யாவில், வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுடைய பாதுகாவலர்கள் இருவர், கையில் பயணப்பெட்டியுடன்(Suitcase) காணப்பட்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததான battle of Stalingrad என்னும் போரில் வெற்றி பெற்றதன் நினைவு நாள் விழாவில், இந்த வாரம் ரஷ்ய அதிபர் புடின் கலந்துகொண்டார்.
Volgograd அமைந்துள்ள நினைவிடத்தில் மலர்கொத்துக்கள் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பாதுகாப்புக் கவசம்
அப்போது, அவருடனிருந்த பாதுகாவலர்கள் இருவர் தங்கள் கைகளில் பயணப்பெட்டியை வைத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
புடினுடைய பாதுகாவலர்கள் கையில் பயணப்பெட்டிகளை வைத்திருப்பதில் என்ன முக்கியத்துவம் உள்ளது என பலரும் நினைக்கலாம்.
குறிப்பாக புடினுடன் எப்போதும் இருக்கும் ஒரு பாதுகாவலர் கையில் பயணப்பெட்டி போல வைத்திருப்பது, மடித்து வைக்கப்பட்டுள்ள ஒரு பாதுகாப்புக் கவசம் என கூறப்படுகின்றது.
அணு ஆயுத பொத்தான்
ஏதேனும் ஒரு தருவாயில் துப்பாக்கிச்சூடு நடத்தினால், புடினை பாதுகாப்பதற்காக அவரது பாதுகாவலர் ஒருவர் எப்போதும் தன் கையில் அதை வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.
ரஷ்யாவின் அணு ஆயுதங்களை இயக்குவதற்கான பொத்தான் (launch button) அடங்கிய பயணப்பெட்டியை மற்றைய பாதுகாவலர் வைத்திருப்பர் என கூறப்படுகின்றது.
ஆகவே, புகைப்படத்தில் அந்த இரண்டாவது பாதுகாவலர் வைத்திருக்கும் பயணப்பெட்டி , அந்த அணு ஆயுத பொத்தான் கொண்டது என கருதப்படுகிறது.
உலகின் கவனத்தை ஈர்க்கும்
இதற்கிடையில், உக்ரைன் ஊடுருவலின் முதலாம் ஆண்டு நினைவுநாளின்போது, ரஷ்யா உலகின் கவனத்தை ஈர்க்கும் ஒரு செயலை செய்ய இருப்பதாக எச்சரித்துள்ளது.
இந்த நேரத்தில் அணு ஆயுத பயணப்பெட்டியுடன் புடின் காணப்படும் காட்சியும் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
