உக்ரைனின் துல்லியத் தாக்குதல் - முற்றாக அழிக்கப்பட்டது ரஷ்யாவின் இராணுவத் தளம்!
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் போர் தாக்குதலை தொடங்கியிருந்தது.
இவ்வாறான நிலையில் ஆறு மாதங்களுக்கும் மேலாக யுத்தம் நடைபெற்று வருகிறது.
இதில் உக்ரைனின் மரியுபோல், மெலிடோபோல் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றின. அத்துடன் அங்கு தங்களது இராணுவ நிலைகளையும் அமைத்துள்ளனர்.
முற்றாக அழிந்த இராணுவத் தளம்
இந்நிலையில், உக்ரைனின் மெலொடோபோல் நகரில் உள்ள ரஷ்ய ராணுவ தளம் மீது உக்ரைன் படையினர் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் தற்போதும் கிழக்கு உக்ரைன் பகுதிகள் மீது ரஷ்ய படைகள் தீவிரமாக தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த நிலையிலேயே ரஷ்யாவின் இராணுவ தளம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது.
ரஷ்யா கைப்பற்றிய மெலிடோபோல் நகரில் தனது துணை இராணுவ தளத்தை அமைத்துள்ளது. இங்கிருந்து உக்ரைனின் மற்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.
குண்டுகள் வீசப்பட்டு அதிரடித் தாக்குதல்
இந்த இராணுவ தளத்தை குறிவைத்து உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதன் போதே ரஷ்ய ராணுவ தளம் மீது குண்டுகள் வீசி அதிரடியாக தாக்கப்பட்டது.
இராணுவ தளத்துக்கு செல்லும் பாலம் முழுமையாக தகர்க்கப்பட்டது. இதுகுறித்து கிழக்கு உக்ரைனில் உள்ள லுகான்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர் செர்ஜி கெய்டே கூறுகையில்,
ரஷ்யாவின் ராணுவ தளம், துல்லியமான தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
