கடும் தொனியில் புடினுக்கு எச்சரிக்கை
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மட்டுமே பொறுப்பு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ( Joe Biden) தெரிவித்துள்ளார்.
தீவிரமடையும் உக்ரைன் - ரஷ்ய மோதல் தொடர்பில் வோஷிங்டனில் பேசிய அவர், இதற்காக புடின் நீண்ட கால விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
இதன்போது மேலும் பேசிய அவர்,
“பெரும் முதலாளிகளாலும், வன்முறை நிறைந்த ஆட்சியாளர்களாலும், ஊழல் அதிகாரிகளாலும் ரஷ்ய ஆட்சி தாங்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் ஐரோப்பிய பங்காளிகளுடன் இணைந்து தங்களது சொகுசுக் கப்பல்கள், ஜெட் விமானங்கள், சொகுசு சொத்துக்களை பறிமுதல் செய்யப்போகிறோம்.
தவறான வழியில் சம்பாதித்த உங்கள் இலாபத்தை நோக்கியே நாம் வருகிறோம்” என்றார்.
இதுவொருபுறமிருக்க, எந்தெந்த ரஷ்யப் பெருமுதலாளிகள் மீது தடைவிதிக்கப்பட்டது என்ற பட்டியலை அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்கெனவே வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
