ரஷ்ய - உக்ரைன் விவகாரத்தில் பெரும் சந்தேகம் - அமைதியின் பின்னணி?
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் நீடித்து வருகின்றது.
உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி ஒரு போதும் சரணடைய மாட்டோம் என்று பதிலடித் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு எதிராக உலக நாடுகள் பல, தொடர்ச்சியாக ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல பொருளாதார தடைகளை தொடர்ச்சியாக விதித்த வண்ணம் உள்ளது.
ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், தாய்வான், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள், பொருளாதார தடை, இராஜாங்க ரீதியான பயணத் தடை உள்ளிட்ட தடைகளை விதித்துள்ளதுடன், மேலும் பல நாடுகள் உக்ரைனுக்கு நிதி உதவியினையும், ஆயுத உதவியினையும் வழங்கிய வண்ணம் உள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், ரஷ்யா - உக்ரைன் பிரச்சினையில் இஸ்ரேல் தலையீடு செய்யாது அமைதி காப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இந்த ஒளியாவணம்,