ரஷ்ய படைகளின் தாக்குதலில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி!
death
russia
child
ukraine
war
peoples
By Kalaimathy
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தொடர்ச்சியாக 3 ஆவது நாளாகவும் கடும் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது.
இந்த தாக்குதலில் இதுவரை 3 குழந்தைகள் உட்பட 198 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனின் சுகாதார அமைச்சர் விக்டர் லியாஷ்கோ தெரிவித்துள்ளார்.
அதேவேளை 33 குழந்தைகள் உட்பட 1,115 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பிரித்தானியா உட்பட 25 நாடுகள், உக்ரைனுக்கு மனிதாபிமான உதவி அல்லது ஆயுத உதவி வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக பிரித்தானிய ஆயுதப் படை அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பி தெரிவித்துள்ளார்.
ஸ்விஃப்ட் சர்வதேச வங்கி பரிமாற்ற அமைப்பில் இருந்து ரஷ்யாவை அகற்றுவதற்கு மற்றைய நாடுகளை சம்மதிக்க வைக்க பிரிட்டிஷ் இராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்