ஆட்டம் காட்டும் டிரம்ப்: பதவி விலக தயார் - உக்ரைன் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
தனது ஜனாதிபதி பதவியை விட்டுக் கொடுக்கத் தயார் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
நாளை உக்ரைனில் (Ukraine) நடைபெறும் கூட்டத்தில் சில "வலுவான முடிவுகள்" எடுக்கப்பட உள்ளதாகவும் வோலோடிமிர் செலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வலுவான முடிவுகள்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பல தசாப்தங்களாக பதவியில் இருப்பது தனது கனவு அல்ல எனவும், 20 வருடங்களுக்கு பிறகு அல்ல, இப்போது உக்ரைனின் பாதுகாப்பு தொடர்பிலேயே தான் கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

நாளை உக்ரைனில் நடைபெறும் கூட்டத்தில் சில "வலுவான முடிவுகள்" எடுக்கப்பட உள்ளதாகவும், மேலும் ரஷ்யாவிற்கு எதிரான ஆதரவு மற்றும் தடைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தலைவர்களுடன் ஒரு தனி சந்திப்பு நடத்தவுள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பைடன் மற்றும் டிரம்ப் நிர்வாகங்களின் ஆதரவுக்கு "நன்றி" என்று தெரிவித்த அவர், உக்ரைனுக்கு உதவ ஜனாதிபதி ட்ரம்பிடமிருந்து புரிதல் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற விரும்புவதாக குறிப்பிட்டார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், ஆனால் துரதிஷ்டவசமாக இன்னும் எங்களது சந்திப்பு இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டார்.
திருப்புமுனை
இதுவொரு விளையாட்டு பொருள் அல்ல, போர் எனவே எங்களுக்கு கூட்டாண்மை தேவை, எங்களுக்கு உதவி தேவை, ஆனால் அதற்காக எமது சுதந்திரத்தை இழக்க முடியாது, எங்களது கண்ணியத்தை இழக்க முடியாது.

ஐரோப்பியத் தலைவர்களுடனான நாளைய உக்ரைனின் சந்திப்பு ஒரு "திருப்புமுனையாக" இருக்கும் என்று நம்புவதாகவும் செலென்ஸ்கி குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்