ஈரானை சீண்டி விட்ட உக்ரைன்! பதிலடி நிச்சயம் - அராக்ச்சி வெளியிட்ட அறிவிப்பால் பதற்றம்
கஸ்பியன் கடலில் ஈரானிய வணிகக் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மீது ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு மாலுமி உயிரிழந்த இந்தச் சம்பவத்தை பதிலடி கொடுக்காமல் விட முடியாது என்று அவர் எச்சரித்துள்ளார்.
அராக்ச்சியின் பதிவு
தனது எக்ஸ் சமுக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள அராக்ச்சி, ஐரோப்பாவை போருக்குள் இழுப்பதற்காக இஸ்ரேலின் தூண்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் ஐ.நா சாசனத்தின் தெளிவான மீறல் என்று விமர்சித்துள்ளார்.
Zelenskyy has attacked an Iranian commercial vessel, killing a sailor. A blatant UN Charter violation done at Israel's behest to drag Europe into its war.
— Seyed Abbas Araghchi (@araghchi) July 26, 2026
In calls with EU High Rep Kallas and FM Lavrov, made clear that what the freeloader in Kyiv did CANNOT GO UNANSWERED.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியபோது, “கீவ் நிர்வாகம் செய்த இந்தச் செயலுக்குக் கண்டிப்பாகப் பதிலடி கொடுக்கப்படும்” என்பதைத் தெளிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் உளவுத்துறை
ஈரானுடன் தொடர்புடைய இராணுவப் பொருட்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் கப்பல்களுக்கு எதிராக கஸ்பியன் கடலில் உக்ரைன் நீண்ட தூரத் தாக்குதல்களை நடத்தியதை ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும், ஈரானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இராணுவ உபகரணங்களைக் கொண்டு செல்லும் தடைகளுக்குட்பட்ட சரக்குக் கப்பல்களை இலக்கு வைத்ததாக உக்ரைனின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |