உக்ரைன் அரசின் முக்கிய இணைய பக்கங்களில் சைபர் தாக்குதல் - பின்னணியில் ரஷ்யா?
russia
ukraine
cyber attack
By Sumithiran
உக்ரைன் அரசின் இராணுவ வலைதளம் உட்பட முக்கிய இணைய பக்கங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சக வலைதளம் மற்றும் இரண்டு வங்கி இணையதளங்கள் நேற்று சைபர் தாக்குதலை எதிர்கொண்டன.
உக்ரைனில் மிகப்பெரிய வங்கிகளான Oschadbank state savings bank and Privat24 ஆகியவற்றின் இணையப்பக்கங்கள் முடக்கப்பட்டன. பின்னர் அவை சரி செய்யப்பட்டன. DDOS தாக்குதலை Privat24 வங்கி எதிர்கொண்டதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த சைபர் தாக்குதலுக்கு பின்னணியில் ரஷ்யா இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
