போர் பதற்றம் - உக்ரைனில் நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம்!
உக்ரைன் நாடு தழுவிய ரீதியில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரி உக்ரைன் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார்.
டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் மாகாணங்களை தவிர்த்து இந்த உத்தரவு நாடு முழுவதும் உள்ளடங்கும். இந்த உத்தரவு 30 நாட்கள் நடைமுறையில் இருக்கும். அதன்பின் நீடிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் அவசர பிரகடனம் அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புடினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷ்ய படைகள் நகர்ந்து வருகின்றன.
உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீட்டர் தொலைவில்தான் ரஷ்ய படைகள் முகாமிட்டுள்ளன. இது செயற்கைக்கோள் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனால் எந்த நேரத்திலும் ரஷ்யா போர் தொடுக்கும் நிலை உருவாகியுள்ளது.
