உக்ரைன் விவகாரம் தொடர்பில் ஐ.நா. சபை அவசரமாக கூடுகிறது நாளை!
Russia
Ukraine
war
UNSC
By Thavathevan
உக்ரைன் ரஷ்ய யுத்தம் தொடர்பாக ஐ.நா. சபையின் அவசரகால சிறப்புக் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட 22 உறுப்பு நாடுகள் ஐ.நா. சபையின் தலைவர் அப்துல்லா ஷாகித்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்தக் கடிதத்தை தொடர்ந்து, ஐ.நா. சபையின் அவசரகால சிறப்புக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 27 ஆவது நாளாக யுத்தம் மேற்கொண்டு வருகிறது.
ரஷ்யப் படைகள் அந்நாட்டின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றும் நோக்கில் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
நேற்றைய தினம் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள ஒரு வணிக வளாகம் மீது ரஷ்யப் படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 08 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி