பதிலடி தாக்குதலுக்கு தயார் - ஜெலென்ஸ்கி சூளுரை..!
பதிலடி தாக்குதலுக்கு தற்போது நாங்கள் தயார் என, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உலக தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று(3) வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
15 மாத கால போர் நடவடிக்கையில் உக்ரைனின் கிழக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுபாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர்.
இருப்பினும் ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறுவதை உக்ரைனிய ஆயுதப் படைகள் தொடர்ந்து வெற்றிகரமாக தடுத்து வருகின்றனர்.
பதிலடி தாக்குதல்
இந்நிலையில் இன்று ஒளிப்பரப்பான குறித்த நேர்காணலில் ஜெலென்ஸ்கி முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதில், "ரஷ்யாவிடம் இழந்த பிராந்தியங்களை மீட்டெடுக்க நீண்ட காலமாக காத்திருந்த உக்ரைன், தற்போது பதிலடி தாக்குதல் நடத்த தயாராகி விட்டது.” என தெரிவித்துள்ளார்.
மேலும் இதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என உறுதியாக நம்புவதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஆயுத உதவி
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இது எவ்வளவு காலம் எடுக்கும் என்று எனக்கு தெரியவில்லை, உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இவை பல்வேறு வழிகளில் செல்லலாம்.
#Zelenskyy said that #Ukraine is ready for a counteroffensive. pic.twitter.com/haazTAxTXI
— NEXTA (@nexta_tv) June 3, 2023
இந்த முறை எங்கள் நடவடிக்கை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும், இருப்பினும் அதனை நாங்கள் செயல்படுத்த போகிறோம். நாங்கள் இப்போது அதற்கு தயார்” என குறிப்பிட்டுள்ளார்.
கூடுதல் ஆயுதங்கள் வேண்டி உக்ரைன் அதிபர் ஐரோப்பிய நாடுகளுக்கு சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்ததை தொடர்ந்து பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி வழங்க முன்வந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
